×

லாலு பிரசாத் மகள் மீது வழக்குப் பதிவு

சரண்: பீகாரின் சரண் தொகுதியில் 5ம் கட்டமான கடந்த 20ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. பிகாரி தாக்கூர் சவுக் அருகேவுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக பாஜ, ராஷ்ட்ரிய ஜனதா உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் சந்தன் யாதவ்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சரண் தொகுதி ஆர்ஜேடி வேட்பாளரும், லாலு பிரசாத் மகளு மான ரோகிணி ஆச்சார்யா மீதும் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

The post லாலு பிரசாத் மகள் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Lalu Prasad ,Charan ,Bihar ,Bada Delma ,Bihari Thakur Chowk ,BJP ,Rashtriya Janata ,Dinakaran ,
× RELATED பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்...