×

நவம்பர் 15ல் பேச்சுவார்த்தை : பெய்ஜிங் ஒலிம்பிக்ஸை காண அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு அழைப்பு விடுக்கிறது சீனா!!

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சீன பிரதமர் ஜி ஜிங்பிங் உடன் நவம்பர் 15ம் தேதி அன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ரீதியிலான பனிப்போர் நீண்ட காலமாக நிலவும் சூழலில் இந்த பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இரு தரப்பு வர்த்தக சிக்கல்கள், மனித உரிமை விவகாரங்கள், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, சீனாவின் அணு ஆயுத குவிப்பு தொடர்பாக ஜோ பிடன் கவலை தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காலநிலை மாற்றம், கொரோனா பேரிடர் குறித்து ஆலோசிக்க உள்ளதாக சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோல்ப் விளையாட்டை போல இரு நாடுகளும் சிறப்பான செயல்பாடுகளை வெளி காட்டவே விரும்புவதாகவும் குத்துச் சண்டையை போல ஒருவரை ஒருவர் நாக் அவுட் செய்ய விரும்பவில்லை என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை ஒட்டி அடுத்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸை காண ஜோபிடனுக்கு ஜின்பிங் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : China ,US President ,Jobidan ,Beijing Olympics , ஜோ பிடன்
× RELATED சீனாவில் குழந்தைகளை குறிவைக்கும்...