×

கனமழை முடிந்துவிட்டது, இனி சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் : தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: கனமழை முடிந்துவிட்டது, இனி சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் அளித்துள்ளார். மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் கேடிசி பெல்ட்டில் சராசரியாக 150 மிமீ மழை பதிவாகியுள்ளது, சில இடங்களில் 200 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கனமழை பெய்வது குறைந்துவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை நகர பகுதிகளில் சராசரியாக 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 7745 கனஅடியாகவும், நீர்திறப்பு 6221 கனஅடியாகவும் உள்ளது. பூண்டி ஏரி 76% நிரம்பியுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 6690 கனஅடியாகவும், நீர்திறப்பு 3218 கனஅடியாகவும் உள்ளது. புழல் ஏரி 87% நிரம்பியுள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 3625 கனஅடியாகவும், நீர்திறப்பு 2015 கனஅடியாகவும் உள்ளது. சோழவரம் ஏரி 83% நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 4235 கனஅடியாகவும், நீர்திறப்பு 2151 கனஅடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 75% நிரம்பியுள்ளது. அணைகள் திறப்பு குறித்து அரசு அறிவிப்புகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்துமாறும், பயப்பட தேவையில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தாம்பரத்தில் 23 செ.மீ, சோழவரம் 22 செ.மீ, எண்ணூர் 20 செ.மீ, கும்மிடிப்பூண்டியில் 18 செ.மீ, மாமல்லபுரம் 16 செ.மீ, ஆழ்வார்பேட்டை 16 செ.மீ, நுங்கம்பாக்கம் 15 செ.மீ, மைலாப்பூர் 15 செ.மீ, பெரம்பூர் 15 செ.மீ, எம்ஆர்சி நகர் 15 செ.மீ, அம்பத்தூர் 14 செ.மீ, கே.கே. நகர் 14 செ.மீ, மீனம்பாக்கம் 14 செ.மீ, அயனாவரம் 14 செ.மீ, தரமணி 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


Tags : Chennai ,Tamil Nadu ,Wetherman , Heavy rain
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...