×

இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; சென்னை மக்களே உஷார்

சென்னை: சென்னை நகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் இயக்குநன் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.  புதுச்சேரிக்கு மேற்கில் 170 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழையும், சோழவரத்தில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் என சென்னை மாநகராட்சி வேண்டுக்கோள் விடுத்துள்ளது. இதையடுத்து 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து கொண்டு இருந்த நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் முதலாவதாக ஒரு காற்றழுத்தம் உருவாகி, காற்றழுத்த  தாழ்வுப் பகுதியாக மாறியது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு 6ம் தேதி வந்தது. சென்னையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ. மழையும், சோழவரத்தில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Tags : Chennai ,Ushar , Chennai, coast, barometric depression
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...