×

பாலாபுரம் ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்: எம்.எல்.ஏ பங்கேற்பு

பள்ளிப்பட்டு: பாலாபுரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 127 ஆதிதிராவிடர்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.தென்னரசு சார்பில் மனு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் குறை தீக்கும் முகாம் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இம்முகாமில், கலந்துக்கொண்ட திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரனிடம் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா, முதியோர் உதவி தொகை  உட்பட பல்வேறு சான்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டு 55 பேர் மனுக்கள் வழங்கினர்.

முகாமில், பங்கேற்ற  ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.தென்னரசு போதுமான இட வசதி இன்றி குடியிருந்து வரும்  ஊராட்சியை சேர்ந்த 127 ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் மனு வழங்கினார். மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
உதவி இயக்குநர் (சர்வே) குமரவேல், வட்டாட்சியர் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசுலு, அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கவிதா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Balapuram ,MLA , People's grievance redressal camp on behalf of the revenue department in Balapuram panchayat: MLA participation
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது