×

முல்லை பெரியாறில் உள்ள பேபி அணையை பலப்படுத்துங்கள்: கேரளாவுக்கு ஒன்றிய அரசு கடிதம்

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த அணையை பலப்படுத்தும்படி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கேரளாவுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு அருகே உள்ள பேபி அணையை  பலப்படுத்துவதற்காகவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் 15 மரங்களை வெட்ட வேண்டும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதன் பேரில், மரங்களை வெட்டு அனமதிக்கலாம் என முல்லை  பெரியாறு மேற்பார்வை குழு கேரள அரசிடம் ெதரிவித்தது.

இதைத் தொடர்ந்து, 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை தமிழக அரசுக்கு கேரள வனத்துறை சமீபத்தில் வழங்கியது. இதற்கு கேரளாவை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த உத்தரவை ேகரள அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பேபி  அணையை பலப்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழக  அரசு தெரிவித்தது. இதையடுத்து, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு எழுதியுள்ள கடிதத்தில், ‘பேபி அணையை பலப்படுத்த வேண்டும். அணுகு சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளது.

தமிழக, கேரள முதல்வர்கள் அடுத்த மாதம் ஆலோசனை?
ேகரள சட்டசபையில் நேற்று ேகள்வி நேரத்தின் போது முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நீர்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் அளித்த பதிலில், ‘முல்லை பெரியாறு அணை 126 ஆண்டுகள் பழமையானது. சுண்ணாம்பால் கட்டப்பட்ட இதன் அருகில் வசிப்பவர்கள் பீதியில் உள்ளனர். இதனால், புதிய அணை கட்டும் கோரிக்ைகயை உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு முன்வைத்தது.

தமிழ்நாட்டின் அனுமதியுடன் புதிய அணை கட்டலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இது தொடர்பாக இருமாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதியிலும் இதுவரை சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால், சென்னையில் வரும் டிசம்பரில் தமிழ்நாடு, கேரள முதல்வர்களுக்கு இடையே ஆலோசனை கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது,’ என்று தெரிவித்தார்.

Tags : Mulla Periyar ,Union Government ,Kerala , Mullaperiyaru, Baby Dam, Kerala, Union Government
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...