×

கோயில்களின் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பணியாளர் நியமனம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனை தொடர்ந்து முதுநிலை கோயில்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழநி  தண்டாயுதபாணி சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட 47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோயில் வாரியாக எத்தனை பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்புக்கு தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதுநிலை அல்லாத திருக்கோயில்களான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்,  பண்பொழில்  திருமலைக்குமார சுவாமி கோயில், காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் கோயில், கடலூர் மாவட்டம், மணவாளநல்லூர், கொளஞ்சியப்பர் திருக்கோயில்,   ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில் உட்பட 489 கோயில்களுக்கு பாதுகாப்பு பணியாளர்களும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணிகள் கோயில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags : Minister , Appointment of 10 thousand personnel for the protection of temples: Minister Sekarbabu Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...