×

சரக்கு சேவை மூலம் இந்த ஆண்டு ரூ.337 கோடி வருவாய் :தென்மேற்கு ரயில்வே தகவல்

பெங்களூரு: சரக்குகள் மூலம் சேமிக்கப்பட்ட வருமானம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு ரயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரயில்களில் வெளிமாநிலங்களுக்கு, வெளிமாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை 7 மாதங்கள் சரக்குகள் கையாண்டது மூலம் தென்மேற்கு ரயில்வேக்கு ரூ.337 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24.56 சதவிகிதம் அதிகமாகும். கொரோனாவுக்கு பின் ரயில்களில் சரக்குகளை அனுப்புவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 5 மாதங்களில் 3.54 மில்லியன் டன் சரக்குகள் ரயி கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒட்டு மொத்த சரக்குகள் கையாண்டதில் 1.30 மெட்ரிக் டன் இரும்பு தாது அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 16.6 சதவிகிதம் அதிகமாகும். சரக்குகளை அனுப்புவது நடப்பு ஆண்டில் 23.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 0.10 சதவிகிதம் கச்சா எண்ணெய் அனுப்பியது அதிகரித்துள்ளது. 14.3 சதவிகதம் சர்க்கரை, 147 சதவிகிதம் உரம், 10 சதவிகிதம் பெட்ரோலியம், இரும்பு ஆலைகளில் இருந்து இரும்பு மற்றும் கம்பிகள் அனுப்பியது 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சிமெண்டு நிறுவனங்களில் இருந்து 14.3 சதவிகிதம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Southwestern Railway , Rs 337 crore revenue from freight services this year: Southwestern Railway
× RELATED மகாராஷ்டிராவில் இருந்து...