சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி உள்பட 6 ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை: சென்னை மாநகர மக்களுக்காக குடிநீர் வழங்கும் 6 ஏரிகளின் நிலவரம் வருமாறு:

1புழல் ஏரி: புழல் ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது 2,886 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. தற்போது 19.37 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,358 கன அடி. ஏரியிலிருந்து வினாடிக்கு 2,191 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

2 சோழவரம் ஏரி: சோழவரம் ஏரியின் முழு கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடி. தற்போது, 872 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 18.86 அடி. தற்போது 17.80 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 798 கன அடி. ஏரியிலிருந்து வினாடிக்கு 1,215 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

3 செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது ஏரியில் 2,892 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது 21.14 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 125 கன அடி. ஏரியிலிருந்து வினாடிக்கு 2,144 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

4பூண்டி நீர்த்தேக்கம்: பூண்டி நீர்த்தக்கத்தின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது நீர்த்தேக்கத்தில் 2,730 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது நீர்த்தேக்கத்தில் 33.70 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 3,251 கன அடி. நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 4084 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

5 வீராணம் ஏரி: வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 1465 மில்லியன் கன அடி. தற்போது ஏரியில்  903 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 8.50 அடி. தற்போது 6.15 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 434 கன அடி. ஏரியில் இருந்து வினாடிக்கு 434 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

6கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்:  கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது 500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்த்தேக்க மொத்த உயரம் 36.61 அடி. தற்போது 36.61 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 90 கன அடி. வினாடிக்கு 90 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: