×

வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்நிலைப்பகுதிகளான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற  கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை  செய்து தரவும், தங்குமிடங்களில் சுகாதார முகாம்கள் அமைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு  அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும், போர்கால அடிப்படையில்  மீட்புப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


Tags : Northeast ,Monsoon , Northeast Monsoon Advisory Meeting
× RELATED கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை