×

வியன்னா பேச்சுக்கு முட்டுக்கட்டை வருமா?: ஓமான் வளைகுடாவில் ஈரான் திடீரென போர் பயிற்சி.. முப்படைகளும் பங்கேற்பு..!!

ஈரான்: அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ள நிலையில் ஈரான் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஓமன் வளைகுடாவின் ஹார்மோஸ் ஜலசந்தியின் கிழக்கே ஈரான் வருடாந்திர போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதில் கடற்படை, விமானப்படை, ராணுவம் என முப்படைகளும் கலந்துக் கொண்டுள்ளன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ போக்குவரத்து விமானம், நீர் மூழ்கி கப்பல்கள், டிரோன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. போர் விமானங்களில் இருந்து குறிப்பிட்ட இலக்குகளை தாக்கியும், பீரங்கிகள், கவச வாகனங்களில் இருந்து குறி தவறாமல் இலக்குகளை அழித்தும் ஈரான் வீரர்கள் பயிற்சி செய்தனர்.

இந்த போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து ஈரான் எதுவும் அறிவிக்கவில்லை. பலமாத இழுபறிக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் வரும் 29ம் தேதி மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கும் நிலையில், ஈரான் மேற்கொண்டுள்ள போர் பயிற்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் போர் பயிற்சியை ஈரான் மேற்கொண்டிருப்பது வியன்னா பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது.


Tags : Vienna , Gulf of Oman, Iran, war training
× RELATED ஆஸ்திரியாவில் நடைபெற்ற வித்தியாசமான...