×

ஆஸ்திரியாவில் நடைபெற்ற வித்தியாசமான பந்தயம்: போட்டியைக் காண லயீன்ஸ் நகரில் ஆர்வலர்கள் குவிந்தனர்

வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் லயீன்ஸ் நகரில் நடைபெற்ற டோலோமிட்டன்மேன் பந்தயம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 50 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த பந்தயத்தில் 112 குழுக்கள் பங்கேற்றன. குழுவுக்கு 4 பேர் வீதம் ஓட்டப்பந்தயம், பராகிளைடிங், சைக்கிள் பந்தயம், படகு போட்டி என 4 விதமான போட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்கவேண்டும். முதலில் கரடுமுரடான மலை பாதையில் ஓட்ட பந்தயம் தொடங்கியது.

வீரர்கள் மலையின் உச்சியை அடைந்ததும் அங்கிருந்து பராகிளைடிங்கில் பறக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட தூரத்தை சைக்கிள் மூலம் கடக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. இந்த விசித்திரமான மற்றும் விறுவிறுப்பான பொடியை காண ஏராளமானோர் அங்கு திரண்டதால் லையின்ஸ் நகரம் பரபரப்பாக காட்சியளித்தது. பந்தயத்தில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற கோலண்டு டாப் ஸ்போர்ட் குழுவினர் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்து முதலிடத்தை தன் வசப்படுத்தினர்.

The post ஆஸ்திரியாவில் நடைபெற்ற வித்தியாசமான பந்தயம்: போட்டியைக் காண லயீன்ஸ் நகரில் ஆர்வலர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Austria ,Lions ,Vienna ,Lienz, Austria ,
× RELATED திருவேங்கடம் கலைவாணி பள்ளி சிலம்பம் போட்டியில் சாதனை