செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், தி.மலை, திருவாரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருச்சி, கரூர், சிவகங்கை, மதுரையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

10-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சியில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுது உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு பகுது உருவான பின்னர் 24 மனி நேரத்தில் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செய்யூர், மதுராந்தகம், சோழவரத்தில் தலா 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories: