×

மாரீஸ்வரனுக்கு பாராட்டு

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் இம்மாதம் 24ம் தேதி  ஜூனியர் ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி தொடங்குகிறது. அதில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் தமிழகத்தின் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் தேர்வு பெற்றுள்ளார். மாரீஸ்வரனை சென்னைக்கு அழைத்து பாராட்டிய தூத்துக்குடி எம்பி கனிமொழி ரொக்கப் பரிசும் வழங்கினார். அப்போது தமிழ்நாடு ஹாக்கிச் சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், தமிழ்நாடு தேர்வு குழு தலைவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான திருமாவளவன், துணைச் செயலாளர் கிளெமன்ட் லூர்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

* தமிழக அணியில் கார்னிகா
சென்னையில் சமீபத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கற்க உள்ள தமிழக அணியை தேர்வு செய்ய மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. அதில் யு12 பிரிவில் கரூர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பங்கேற்ற கார்னிகா முத்து பாண்டியன் (பரமத்தி வேலூர்) தலா ஒரு தங்கம், வெண்கலம் வென்றதுடன், தமிழக அணிக்கும் தேர்வானார். கார்னிகாவுக்கு, அவர் பயிற்சி பெறும் கரூர் பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி பயிற்சியாளர் என்.சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Mariswaran , Praise to Mariswaran
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில்...