×

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணியில் 5 ஸ்பின்னர்கள் சேர்ப்பு: விலகினார் போல்ட்

புதுடெல்லி: இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள நியூசிலாந்து அணியில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் முடிந்ததும், இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 போட்டிகள் ஜெய்பூர் (நவ. 17), ராஞ்சி (நவ. 19), கொல்கத்தாவிலும் (நவ. 21) நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் கான்பூரில் நவ. 25ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் மும்பையில் (டிச. 3-7) நடைபெறும்.

இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய ஆடுகளங்களின் தன்மையை கவனத்தில் கொண்டு 5 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் ‘பயோ பபுள்’ சோர்வு காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளன்டெல் (விக்கெட் கீப்பர்), டிவோன் கான்வே, கைல் ஜேமிசன், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, மிட்செல் சான்ட்னர், வில் சாமர்வில்லி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், வில் யங், நீல் வேக்னர்.

Tags : New Zealand ,India ,Bolt , New Zealand add 5 spinners to Test series against India: Bolt resigns
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.