தீபாவளி பண்டிகையையொட்டி பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு என்னுமிடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். மலை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளுக்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், இந்த சந்தைக்கு சேலம், தலைவாசல், கெங்கவல்லி, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று நடந்த வாரச்சந்தையில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவை எடைக்கேற்ப ₹10,000 முதல் ₹20,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Related Stories: