×

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று: British standards institution வழங்கியது!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல்  கட்டுப்பாட்டு  அறைக்கு British Standards Institution-னால் வழங்கப்பட்ட ISO 27001:2013  சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள  மாநில  காவல்  கட்டுப்பாட்டு  அறையில்,  அவசர  கால  உதவி  எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது  நவீன  ஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்ப  கட்டமைப்புகளுடன்  நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 இலட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு British Standards Institution  ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று  வழங்கப்பட்டுள்ளது.  இச்சான்றானது,  இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு  பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்) திரு. அமரேஷ் புஜாரி, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப சேவை) திரு. வினித் தேவ் வான்கடே, இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவை) திருமதி எஸ். மல்லிகா, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  



Tags : India ,TN Police Control Room , தமிழ்நாடு முதலமைச்சர்
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...