கொடநாடு கொலை வழக்கு கனகராஜ் உறவினருக்கு போலீஸ் காவல் நீடிப்பு

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை சாட்சியங்களை கலைத்ததாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணை முழுமையடையாததால் நேற்று முன்தினம் மீண்டும் 5 நாட்கள் தனபாலை தனிப்படை போலீசார் காவலில் எடுத்தனர். இந்த நிலையில் ரமேஷின் காவல் நேற்றுடன் முடிந்தது. நேற்று ஊட்டியில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். ரமேஷை மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரரிக்க அனுமதிக்கபோலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால், நீதிபதி ஸ்ரீதர், மேலும் 5 நாட்கள் ரமேஷிடம் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

Related Stories: