×

14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

டெல்லி: 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 14 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் 16 இடத்தை கைப்பற்றுகிறது. பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மண்டி மக்களவைத் தொகுதி, 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் ஆளும் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற கர்நாடக மாநிலத்தில் ஒரு தொகுதியை மட்டுமே பாஜக கைப்பற்றியது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹங்கால் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிமுகம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டப்பேரவை தொகுதிகளையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது.

பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தின்ஹட்டா தொகுதியில் திரிணாமுல் வெற்றியால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. தின்ஹட்டா தொகுதியில் பாஜக வேட்பாளரை 1.40 லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திரிணாமுல் வேட்பாளர் வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடந்த 2 சட்டப்பேரவை தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பத்வேல் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. தத்ரா நாஹர்ஹாவேலி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட சுமார் 40,000 வாக்குகள் கூடுதலாக பெற்று சிவசேனா முன்னிலை பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை பாஜக கைப்பற்றுகிறது. மத்தியப்பிரதேசத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற தன்த்துவா மக்களவை தொகுதியையும் பாஜக கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆளும் பாஜகவை விட எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளையும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகின்றன.

Tags : Bhajakawa , BJP
× RELATED காங். கூட்டணி வேட்பாளர் பாஜகவுக்கு ஓட்டம்: அசாமில் தேர்தல் ரத்து ஆகுமா?