சிலம்பத்தில் 33 தங்க பதக்கம் வென்ற மேலூர் மாணவர்கள்

மேலூர்: மேலூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 33 தங்க பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். மதுரை விளாங்குடியில் இந்தியன் சிலம்ப பள்ளி, ராயல் வித்யாலயா பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மேலூர் போதி தர்மா பாதுகாப்பு கலை பள்ளி மாணவர்களில் 33 பேர் தங்க பதக்கங்களையும், ஏராளமானோர் வெள்ளி, வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தினர். இவர்களுக்கு பயிற்சியாளர் போஜராஜன் பயிற்சி அளித்து வெற்றிகளுக்கு வழி வகுத்தார்.

தங்க பதக்கங்களை வென்ற மாணவர்கள் விபரம் பின் வருமாறு: வெற்றி, கபில், தேவஹரீஸ், சாய் ஆகாஸ், லிங்கேஷ், கோபிராஜ், அபிஷேக், அருண்குமார், கவுசிக், ஸ்ரீபாலாஜி, அகர்வின், ஹரிஹரன், மிர்துயுன்சாய், லோகேஷ்குமார், நரேன், கார்த்திகேயன், மோனிஷ், சந்தோஷ், மதுக்ஷரா, ஹரிணி, சுவேதா, லத்திகா, ஹரிணி, மகதி, நிதர்ஷனா, அபி, அபினேஷ், போதீஸ்வரன், பிரித்திகா ஸ்ரீ, விஷ்ணு குரு, ரவி வர்மா.

வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள்:

அமிழ்தமிழ் செம்மல், தருண், பிரபஞ்சன், பாலமுருகன், தரணீஷ்வரன், ரித்தீஸ், ஜெயகுமார், ஹரித், பிரகதீஸ், ரத்திஸ், கவிபாரத், தர்ஷன், மதன்ராஜ், பத்ரிநாத், ஹரிஹரசுதன், நிதின், தீப்தி, மோதிகா, சுருதிகா ஸ்ரீ, நாகலோஷினி, துரைநிதி, சந்தானலட்சுமி, கலைவாணி, ஜெயக்குமார், தவஸ்ரீ, ரித்தீஸ்வரி, சுபஸ்ரீ, தனலட்சுமி, அனுஹாசினி, விஷ்வா, தீர்க்கதர்ஷினி, வெற்றிவேல், ஹாதீம் இப்ராகிம் ஆகியோர் பெற்றனர்.

Related Stories: