×

அரையிறுதி வாய்ப்பு `அம்போ’

அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது. பாகிஸ்தான் (இந்தியா, நியூசிலாந்து, ஆப்கன்) 3 போட்டியிலும் வென்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. ஆப்கன் 2, நியூசிலாந்து, நமீபியா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்தியா 3ம்தேதி ஆப்கனுடன் மோதுகிறது. இந்தியாவை விட ஆப்கன் இந்த தொடரில் சிறப்பாகவே ஆடுகிறது. பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டியது. இதனால் இந்தியாவை வீழ்த்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆப்கன், 5ம்தேதி ஸ்காட்லாந்து, 8ம்தேதி நமீபியாவை இந்தியா அதிக ரன்ரேட்டில் வீழ்த்த வேண்டும். இதே நேரத்தில் நியூசிலாந்து ஆப்கனிடம் தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால் ஒரு வேளை இந்தியா, நியூசிலாந்து, ஆப்கன் தலா 3 வெற்றிகளுடன் இருக்கும். அதில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். ரன்ரேட்டில் ஆப்கன் வலுவாக உள்ளது. இதனால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : `Ambo , Semi-final chance 'Ambo'
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...