×

கூடலூரில் 3வது நாளாக தொடரும் சம்பவம்: தொழிலாளியின் குடிசையை சூறையாடிய காட்டு யானைகள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை அருகே உள்ளது பாடந்துறை. இங்கு  முகாமிட்டுள்ள 2 காட்டுயானைகள் தொடர்ந்து 2 வீடுகளை இடித்து உள்ளே சென்று அரிசி, பருப்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதே பகுதியில் உள்ள 3வது மைல் மஞ்சள் மூலைக்கு 3 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த தொழிலாளி கிறிஸ்டோபர் என்பவரது வீட்டை இடித்து தள்ளியது.

பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த அரிசி, பருப்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. கிறிஸ்டோபர் குடும்பத்துடன் தனது சகோதரர் வீட்டிற்கு சென்றதால் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் திமுக தேவர்சோலை பேரூர் செயலாளர் மாதேவ், துணைச் செயலாளர் முபாரக், மாவட்ட பிரதிநிதி மஞ்சள்மூலை சுப்பிரமணியம் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர்  இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்ததோடு, வனத்துறை அமைச்சருக்கும் தகவல் அளித்துள்ளனர்.


தொடர்ந்து 3 வீடுகளை காட்டுயானை கூட்டம் இடித்து தள்ளியதால் இந்த பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். காட்டுயானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.



Tags : Güdalur , Cuddalore, wild elephants
× RELATED கூடலூர் வனக்கோட்டத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க யானை குட்டி மீட்பு