×

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கன்?

சார்ஜா: உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. பிற்பகல் 3.30 மணிக்கு சார்ஜாவில் குரூப் 1 பிரிவில் வெஸ்ட்இண்டீஸ் -வங்கதேச அணிகள் மோதுகின்றன. வெஸ்ட்இண்டீஸ் முதல் போட்டியில் இங்கிலாந்து, 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்தது. லீவிஸ், பூரன், கெய்ல், ஹெட்மயர், பொல்லார்ட், ரஸ்சல் என அதிரடி சூரர்கள் உள்ள அந்த அணியில் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

மறுபுறம் வங்கதேசம் இலங்கை, இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த நிலையில் இன்று கட்டாய வெற்றி நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளன. டி.20 போட்டிகளில் இரு அணிகளும் 12 முறை மோதி உள்ளன. இதில் 5ல் வங்கதேசம், 6ல் வெஸ்ட்இண்டீஸ் வென்றுள்ளன. டி.20 உலக கோப்பையில் இருமுறை மோதியதில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.30 மணிக்கு துபாயில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, நியூசிலாந்து என வலுவான அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் உள்ளது. முதல்போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆப்கன், பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். இரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு டி.20 போட்டியில் மோதியதில் பாகிஸ்தானே வென்றுள்ளது.

Tags : Afghans ,Pakistan , Will Afghans shock Pakistan?
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா