×

இல்லம் தேடி கல்வி திட்டத்தை ஆதரித்து 24 மணி நேர தொடர் சிலம்பாட்டம்-அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பரமக்குடி :  பரமக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை ஆதரித்து 24 மணி நேரம் சிலம்பாட்டம் செய்து சாதனை படைத்துள்ளார். தமிழக அரசின் சார்பாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது,  பரமக்குடி அருகே கீழாம்பல் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை வரவேற்று 7 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட மாணவ,மாணவிகள் உலக சாதனைக்காக 24 மணி நேரம் தொடர் சிலம்பாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில், 25 மாணவ,மாணவிகள் 27ம் தேதி மாலை 4 மணிக்கு சிலம்பு சுற்றத் தொடங்கி 28ம்  தேதி மாலை 4 மணிக்கு சிலம்பு சுற்றுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக 24 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது.

டிரம்ப் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி முத்தா பிரதாப், தென்மண்டல சம்பத்குமார் ஆகியோர் பார்வையிட்டு உலக சாதனைக்கான சான்றிதழை மாணவ,மாணவிகளும் வழங்கினார்கள். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் சேது பாண்டி வரவேற்றார். இதில் கிராம பொதுமக்களும் பள்ளி மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Silambattam ,Government School , Paramakudi: Panchayat Union Primary School students near Paramakudi search for the home of the Tamil Nadu government and support the education program for 24 hours.
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா