கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 150 மாணவர்களை சேர்க்க ஒன்றிய அரசிடம் விண்ணப்பப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 37ஆக உயருகிறது. 16 சுயநிதி மருத்துவ கல்லூரிகள், 9 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 9,100ஆக உயருகிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவ மாணவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழும்.