சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படும் ரோஜா பூங்கா

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்கா வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்து வெறிச்ேசாடி காணப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் நீலகிரியில் உள்ள பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், சுற்றுலா தொழிலை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டன. நீலகிரியில் தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ள நிலையில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு, பண்டிகை விடுமுறை தினங்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களை கட்டி காட்சியளிக்கின்றன. வார நாட்களில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவற்றில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே பூங்காக்களை பார்த்து வருகின்றனர்.

Related Stories:

More