இஸ்ரேலிலிருந்து 27,000 டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி

தூத்துக்குடி: தமிழகத்தில் நிலவும் உரம் தட்டுப்பாட்டை நீக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இதையடுத்து இஸ்ரேல் நாட்டில் இருந்து சுமார் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இஸ்ரேல் நாட்டிலிருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம்  தூத்துக்குடி துறைமுக குடோனில் இருப்பு வைக்கப்பட்டது. இங்கிருந்து 50 கிலோ மூட்டைகளாக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சாலை வழியாக அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதனை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், அரசு அறிவுறுத்தலின்படி 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரங்களும் 50 கிலோ மூட்டைகளாக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Related Stories: