×

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கலாம்: ஆவணம் தேவையில்லை என தமிழக அரசு உத்தரவு

சென்னை: கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கும், ஆவணங்கள் ஏதும் இல்லாமலேயே தனியாக புதிய குடும்ப அட்டை வழங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு பெண் கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையில் இருந்து  நீக்கவும், தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு புதிய குடும்ப அட்டை கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government , New ration card can be issued to a woman abandoned by her husband: Tamil Nadu government orders that no document is required
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...