×

கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டம்..! பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

துபாய்: துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. முதல் ஓவரில் ரோகித் டக்-அவுட், மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுல் 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் கேப்டன் கோலி இன்னிங்ஸை நிதானமாக பில்ட் செய்தார். 45 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் 10 அரை சதங்களை பதிவு செய்த வீரர் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார்.

மறுபக்கம் சூரியகுமார் யாதவ் 11 ரன்களிலும், பண்ட் 30 பந்துகளில் 39 ரன்களிலும், ஜடேஜா 13 ரன்களிலும் எடுத்து அவுட்டாகினர். இதில் பண்ட் மற்றும் கோலி 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜடேஜாவுடன் 41 ரன்களுக்கு கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தார். கோலி 49 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடங்கும்.  இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 152 ரன்கள் தேவை படுகிறது.

Tags : Kohli , Captain Goalie responsible game ..! India set a target of 152 for Pakistan
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...