தமிழகத்தில் பழுதடைந்த 50 அரசு குடியிருப்புகளை புதிதாக கட்ட நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: ஈரோட்டில் வீட்டு  வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று அளித்த ேபட்டி:   தமிழகத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை  வரன்முறைப்படுத்த  நீதிமன்றத்தின் சில உத்தரவுகள் உள்ளது. அதனை அடிப்படையாக  வைத்துதான்  மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 195  இடங்களில் அரசின்  வாடகை குடியிருப்புகளில் மோசமாக உள்ள 50 கட்டிடங்களை  பாதுகாப்பாக அகற்றி புதிதாக  கட்டுவதா? என்பது குறித்து முதல்வர்  வரும் 28ம் தேதி ஆய்வு கூட்டம்  வைத்துள்ளார். அதற்கான அடிப்படை வேலைகளை  செய்துள்ளோம்.

இடிப்பதற்கான  நிதியையும் கேட்டுள்ளோம். ஈரோட்டில்  பயன்படுத்த முடியாத கட்டிடங்கள்  அனைத்தையும் இடித்து புதிதாக கட்ட  முடிவெடுத்துள்ளோம். அரசின் பணத்தையும்,  வீட்டு வசதி வாரியத்தின்  பணத்தையும் வைத்து பணிகளை துவக்கினால் ஆண்டுக்கு 5  அல்லது 6  திட்டங்களைதான் செய்ய முடியும். தமிழகம் முழுவதும் உள்ள 50  பணிகளையும்  உடனடியாக ஆரம்பித்து 2 ஆண்டுகளில் முடிக்க  திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Related Stories: