தொடர் மழையால் ஆத்தூர் காமராஜர் அணை மறுகால் பாய்ந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான புல்லாவெளி, மணலூர், பெரும்பாறை பகுதிகளில் பெய்யும் மழைநீர் வருகிறது. வரும் வழியில்  பெரிய கன்னிமார் கோவில் அருகே நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கும், ஆத்தூர்  ராஜவாய்க்காலுக்கும் மழைநீர் செல்கிறது. 23.5அடி கொள்ளவு உள்ள ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தின் தண்ணீர் மட்டம் கோடை வெயிலின் காரணமாக கிடுகிடுவென குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன்பு தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த இரு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவெண உயர்ந்து 23.5 அடியை எட்டியது. நேற்று காலை 8  மணியளவில் அணை நிரம்பி மறுகால் பகுதியில் தண்ணீர் வெளியேற துவங்கியது. நேரம் ஆக ஆக தண்ணீரின் அளவு அதிகரித்து கொண்டே சென்றது. திண்டுக்கல்  மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் மற்றும் வழியோர கிராம பகுதிகளுக்கு பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் காமராஜர் அணை மறுகால் பாய்ந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: