விஸ்கி விளம்பரத்தில் நடிப்பதா? நடிகை ரெஜினாவுக்கு கண்டனம்

சென்னை: விஸ்கி விளம்பரத்தில் நடித்த நடிகை ரெஜினாவுக்கு  கடும் கண்டனம் எழுந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரெஜினா. தற்போது பார்டர், பார்ட்டி, கள்ளபார்ட், சூர்ப்பனகை போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிரபல நிறுவனத்தின் விஸ்கி விளம்பரத்தில் நடித்து, அந்த போட்டோவையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாட்டிலில் இருக்கும் விஸ்கியை கிளாசில் ஊற்றி, பிறகு கிளாசை கையில் ஏந்தியபடி, விஸ்கியை கிளாசில் ஊற்றி எப்படி கலக்க வேண்டும், எந்த அளவுக்கு ஐஸ் சேர்க்க வேண்டும், ஐஸ் சேர்த்தால் என்ன சுவை, சேர்க்காவிட்டால் என்ன சுவை என்று பேசியிருக்கிறார். சினிமா நட்சத்திரங்கள் புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்படுத்துதல், ஆன்லைன் விளையாட்டு, மது விளம்பரங்களில் நடித்து இளைய சமுதாயத்தினரை கெடுக்கக்கூடாது என்ற பொதுவான விதி இருந்தும், நடிகை ரெஜினா இந்த விளம்பரத்தில் நடித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: