அயர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுக்குமா நமீபியா?

சார்ஜா: டி.20 உலக கோப்பை தொடரில் இன்றுடன் தகுதி சுற்றுப்போட்டிகள் முடிகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் 11வது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் அயர்லாந்து-நமீபியா அணிகள் மோதுகின்றன. அயர்லாந்து முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. 2வது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது. 2 போட்டியில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. நமீபியா முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

2வது போட்டியில் இலங்கையிடம் தோல்வியுற்றது. எனவே அயர்லாந்து-நமீபியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இரவு 7.30 மணிக்கு இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இலங்கை, நமீபியா, அயர்லாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. நெதர்லாந்து 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

Related Stories: