முதல் திருமணத்தை மறைத்து 2ம் திருமணம் செய்ய முயற்சி: கணவன் மீது மனைவி புகார்

பொன்னேரி: திருமணமாகி ஒரு வருடத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துரத்தி விட்டு இரண்டாவது திருமணம் செய்ய முயனற கணவன் உறவினர்கள் மீது மனைவி போலீசில் புகார் கூறியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன்.  ஐடி ஊழியர்.  இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநரை சேர்ந்த நிவேதிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது, இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

இந்நிலையில் நிவேதிதாவின் மாமியார் வரதட்சணையாக ரூ. 50 லட்சம், 50 சவரன் நகை கேட்டு அடித்து உதைத்து  நிவேதிதாவை வீட்டைவிட்டு துரத்தியுள்ளார். இந்நிலையில், திவாகரனுக்கு முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இது குறித்து தகவலறிந்த நிவேதிதா பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துரத்தி இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவன் திவாகர், மாமனார் மோகன்,  மாமியார் கீதா, நாத்தனார் லாவண்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>