குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த மாணவர்களுக்கு சிறந்த குறும்படத்திற்கான பரிசுத்தொகைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். சிறார் நீதிக்குழு சென்னை உயர் நீதிமன்றம் ஆணைக்கிணங்க, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் குறும்படம் தயாரிப்பதற்கு டிஎப்டி மற்றும் விஸ்காம் பயிலும் மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், மாணவர்களால் தயாரித்து வழங்கப்பட்ட குறும்படங்களில் அரசின் தேர்வுக்குழுவினரால்  போட்டி முறையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த குறும்படங்களான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் எம்.ஆனந்தன் தயாரித்த வலி என்ற குறும்படத்திற்கு ரூ.1லட்சம் மற்றும் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவன் வி.பிரசாந்த் தயாரித்த பாரதி என்ற குறும்படத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுத்தொகைகளை காசோலைகளாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னை, தலைமை செயலத்தில் வைத்து வழங்கி மாணவர்களை பாராட்டினார்.  இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Related Stories:

More
>