கூகுள் பிளே ஸ்டோரில் 100 கோடியை சாதித்தது டெலிகிராம்

புதுடெல்லி: கூகுள் பிளே ஸ்டோரில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. `பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் கடந்த 5ம் தேதி 6 மணி நேரம், 10ம் தேதி 2 மணி நேரம் என ஒரே வாரத்தில் 2 முறை செயலிழந்தன. இதையடுத்து, மறுநாளே 7 கோடி பேர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்தனர். இந்த முடக்கம் பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாகி உள்ளது.

இது குறித்து டெலிகிராம் சிஇஓ பவெல் டுரோவ் கூறுகையில், ``2021ம் ஆண்டின் தொடக்கத்தில் டெலிகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை 50 கோடியாக இருந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 70 கோடிக்கும் மேலானோர் டெலிகிராமை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதற்கு பேஸ்புக் முடக்கமும் ஒரு காரணம். தற்போதுல பதிவிறக்கம் செய்தோரின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.  டெலிகிராமுக்கு அடுத்தப்படியாக டிக்டாக் 2வது இடத்தில் உள்ளது.

Related Stories: