×

2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு: செமஸ்டர் திட்டம் இல்லை


புதுடெல்லி: அடுத்த கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான செயல்முறையை தொடங்கும்படி ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சகமானது, அடுத்த கல்வி ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2025-26ம் கல்வி ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொது தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான செயல்முறைகளை உருவாக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பாக அடுத்த மாதம் சிபிஎஸ்இ மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் பள்ளி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் செமஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு: செமஸ்டர் திட்டம் இல்லை appeared first on Dinakaran.

Tags : CBSI ,New Delhi ,CBSE ,Union Ministry of Education ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...