×

தலைகுந்தா பகுதியில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி: ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலைகுந்தா பகுதியில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் விபத்து அபாயம் தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சாலையோரங்களிலும் அதிகளவு மரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் அதிகளவு மரங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக, தலைகுந்தா முதல் கூடலூர் வரையில் சாலையோரங்களில் ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது, இந்த மரங்கள் விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இந்த மரங்களை அகற்றவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையோரங்களில் தற்போது தலைகுந்தா பகுதியில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது. மேலும் எந்நேரமும் சாலையில் நிழல் விழுவதாலும், தண்ணீர் விழுவதாலும் சாலையும் பழுதடைகிறது. எனவே, இந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Talakunda , In the headland area Grown on the roadside Demand for removal of dangerous trees
× RELATED நீலகிரியில் 8 வயது சிறுமி பாலியல்...