×

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது.: ஒருவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல்

லக்கிம்பூர்: லக்கிம்பூரில் வாகனம் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர் .உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்துக்குள் காரை ஏற்றியதால் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து நடந்த வன்முறை நிகழ்வுகளில் மேலும் 4 பேர் பலியாகினர். இந்த வன்முறை காரணமாக மொத்தம் 9 பேர் உரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல எதிர்ப்புகள், கண்டனங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் ஒன்றிய அமைச்சரின் மகன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாஜக-வை சேர்ந்த சுமித் ஜெயிஸ்வால் என்பதும், இவர் விவசாயிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விசாரணையில், நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 பேரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Lakkimpur , Four more arrested in Lakhimpur farmers' carjacking case
× RELATED லக்கிம்பூர் படுகொலை குறித்து விவாதம்...