8வது மாடியில் இருந்து மாணவன் தவறி விழுந்து பலி

பூந்தமல்லி: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நவீன்குமார்(21), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டெக் பயோமெடிக்கல் 4ம் ஆண்டு படித்துவந்தார். செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு பக்கத்து அறையில் நண்பனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நவீன்குமார், மது அருந்தி உள்ளார். இவரது அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்துள்ளது. இதனால் 8வது மாடியில் இருந்து பின்பக்க பைப்லைன் மூலம் ஜன்னல் வழியாக தனது அறைக்கு செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில்  ஏராளமான கல்லூரி மாணவர்கள் தங்கி இருப்பதாகவும், போதைப்பொருட்கள் அதிக  அளவில் புழங்குவதாகவும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் புகார் கூறியுள்ளனர்.

Related Stories: