×

வேலூர் அருகே பூட்டுத்தாக்கில் பாலாற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் மூழ்கிய கோயில்

வேலூர்: வேலூர் அருகே பூட்டுத்தாக்கு பாலாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டோடியதால் அம்மன் கோயில் மூழ்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மழை பெய்துவருவதால், அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதேசமயம் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி வேலூர் மாவட்டம் வழியாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென்று கல்பாக்கம் கடலில் சங்கமிக்கும் பாலாறு வறண்டு போய் கட்டாந்தரையாக காட்சியளித்து வந்தநிலையில், தற்ேபாது மழைவெள்ளம் பாலாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் மோர்தானா அணையும் நிரம்பியதால், வேலூர் பாலாற்றில் இருகரையும் தொட்டபடி, மழை வெள்ளம் செல்கிறது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அதேபோல் ேவலூர் அருகே பூட்டு தாக்கு பகுதியில் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் ேகாயில் பாலாற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாலாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Vellore , The temple was submerged in the floodwaters of the lake near Vellore
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...