காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் 4 நாள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெயிட்டுள்ள அறிக்கை: காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், காவலர் நினைவு நாள், வரும் 21ம் அனுசரிப்படுகிறது. இதையொட்டி, இன்று, 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒத்திகை நடைபெற இருக்கிறது. இதனால், மேற்கண்ட நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் 21ம் ேததியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து, காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.

* சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை மெயின் ரோட்டில் இடதுபுறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை செல்லலாம்.

* கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கு செல்லலாம்.

* ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும், கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை, கலங்கரை விளக்கம், எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை சாலை சர்வீஸ் சாலை வழியாகவும் கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.

Related Stories: