கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி

கோவா: கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம் என பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜனதா விருபும்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று கோவா மாநிலம் சென்றிருந்தார்.

அங்கு பா.ஜனதா தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அமித் ஷா கூறுகையில ‘‘2022 சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க விரும்புகிறோம். பிரதமர் மோடி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கவில்லை என்றால், ராம் கோவில் கட்ட முடியுமா?. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியுமா?. சொல்லுங்கள்’’ என்றார்.

Related Stories: