×

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை: எங்களுக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது ஏன் என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கை:   உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக்கூடாது, வன்முறை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் கடந்த 9ம் தேதி அன்று மனு கொடுத்தோம். அதன் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு பெட்டிகள் பாதுகாக்கப்பட்ட அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களிலே பழுதடைந்து இருக்கிறது. இது மிகப்பெரிய ஐயத்தை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகுதான் தொடங்கி இருக்கிறது.  

அதிமுக முகவர்கள் பல இடங்களிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்பு காட்டவில்லை. இதுபோன்ற ஜனநாயக படுகொலை திமுக நடத்தும் என்பதை முன்கூட்டிய அறிந்த அதிமுக, கட்சியின் சட்ட ஆலோசனை குழு மூலம் 7 புகார் மனுக்களை தேர்தல் ஆணையத்திலே வழங்கி இருக்கிறோம்.  தேர்தலில் கண் துஞ்சாமல் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக களமாடிய அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி.  இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : O. Panneerselvam ,Edappadi Palanisamy , AIADMK, report
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்