×

உலகளவில் குழந்தை திருமணத்தால் தினமும் 60 சிறுமிகள் பரிதாப பலி

புதுடெல்லி: குழந்தை திருமணங்களால் உலகளவில் தினமும் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள் இறப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தைெயாட்டி ‘உலகளாவிய பெண் அறிக்கை- 2021’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: உலகளவில் குழந்தை திருமணத்தால் ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிர் இழக்கின்றனர். இளம் வயது திருமணத்தால் கருத்தறித்தல், பிரசவம் காரணமாக ஆண்டுக்கு 22 ஆயிரம் சிறுமிகள் உயிர் இழக்கின்றனர். ஒரு நாளைக்கு 60 சிறுமிகள் குழந்தை திருமணத்தால் உயிரிழக்கின்றனர். உலகெங்கும் கொரோனா பரவிய போது எந்த நாட்டிலும் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறவில்லை. 2030க்குள் உலகளவில் 10 கோடி பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Globally, 60 girls are killed every day by child marriage
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...