×

தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் ஆலோசனை

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர்களிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் விற்பனை மற்றும் பால் உபபொருட்கள் இனிப்புகள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தீபாளிக்கான ஆவின் இனிப்புகளை அன்பளிப்பை தவிர்த்து விலை கொடுத்து வாங்குங்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பால்வளத்துறை அமைச்சராக என்னை நியமித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நம்மிடையே நேரடி தொடர்பு இல்லாமல் , தொலைபேசி மூலமாகவே தொடர்பு கொண்டு பேசி செயல்பட்டு கொண்டிருந்தோம். எனவே நாம் அணைவரும் இணைந்து ஆவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இந்திய அளவில் ஆவினுக்கென்று தனி மரியாதை உண்டு. கடந்த 10 வருடங்களாக ஆவின் சந்தித்த நஷ்ட நிலைமைகள் இங்கு வந்துள்ள பொது மேலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். பொதுமக்களுக்கும் தெரியும். தலைமை சரியாக இருந்தால் தான் எதுவும் சரியாக இருக்கும். அந்த வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு எவ்வளவு நிதி நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.

எனவே மக்களின் எண்ணங்களை அறிந்து, தெரிந்து, உடனுக்குடன் செயல்படுபவர் நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை அன்பளிப்பு என்று எவரும் எதிர்பார்க்காமல் விலை கொடுத்து வாங்க வேண்டும். நான் பணம் கொடுத்து தான் தீபாவளி இனிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியின் போது வாங்கினேன், அதுபோல இங்குள்ள மேலாண்மை இயக்குநர் அவர்களும், வந்துள்ள அனைத்து பொது மேலாளர்களும் ஆவின் பொருட்கள் ஒவ்வொன்றையும் விலை கொடுத்து வாங்குவதுடன், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்.

குறிப்பாக சென்னையில் மட்டும் அசோக் லே லாண்டு நிறுவனம் இனிப்புகளை வாங்குவார்கள், ஆனால் இந்த வருடம் ஒசூரிலும் கூடுதலாக இனிப்புகள் வாங்கியுள்ளனர். காரணம் ஆவினில் தயாரிக்கப்படும் சுவை மிகுந்த இனிப்புகள். கடந்த ஆட்சிக் காலத்தில் இனிப்புகள் வழங்கியதில் நடந்த தவறுகள் இந்த வருடம் இப்போது நடைபெறவே கூடாது. அதனை பற்றிய விசாரணையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே முதல்வர் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் துறை ரீதியான அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்றும், எதிலும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

அந்தவகையில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட நிலையிலும், அடுத்து வரும் வாரங்களில் பால்வளத்துறைக் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாம் ஏற்கனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் மூலம் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை, விற்பனையை அதிகரிக்க வெளிநாடுகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணையை வழங்கினார். மேலும் தற்போது தீபாவளியை முன்னிட்டு ஆவின் இனிப்புகள், நெய், வெண்ணை, பால்கோவா மற்றும் பால் பவுடர் விற்பனை, விற்பனை செய்ய பெறப்பட்டுள்ள நெய், வெண்ணெய், பால்கோவா மற்றும் பால் பவுடரில் இருப்பு தேவை எனும் பட்டியலின் விவரம், விற்பனை செய்ய எத்தகைய சாத்திய கூறுகள் உள்ளன,

ஒன்றியத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பொருட்கள் மற்றும் ஆவினின் இனிப்புகள் அளவு  மற்றும் மதிப்புகளின் விவரம், தேவை அதிகம் உள்ள பால் உப பொருட்கள், ஆவின் இனிப்பு வகைகளில் சென்ற ஆண்டுகளில் எவை அதிகம் விற்பனை செய்யப்பட்டது, அதிக அளவு காலம் தரக்கூடிய இனிப்பு வகைகள் எவ்வளவு என்று ஆய்வு மேற்கொண்டார். மக்கள் கூடும் இடங்களில் 2021 ஆம் ஆண்டிற்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்ய ஸ்டால்கள் அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் பற்றிய விவரங்கள் இருந்தால் அதை எந்த தயக்கமும் இன்றி கூற வேண்டும். மேலும் ஆவின் இனிப்புகள் விற்பனை மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் குறித்தும் சொல்ல வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தன்னுடைய பாதுகாப்புக்கு வரக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொண்டு, மிகவும் எளிமையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே நாம் மிகவும் கவனத்துடன் பால் உற்பத்தியாளர்களுடைய பணப்பட்டுவாடா வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இயன்ற அளவு பால் பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், நிதி ஆதாரம் இல்லாத பட்சத்தில் அவசரம் கருதி வங்கிகளின் மூலம் கடன் பெறப்பட்டிருப்பின் அதன் விபரம் என்ன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு.ரி.ஷி.கந்தசாமி இ.ஆ.ப அவர்கள், திருமதி.பி. ஜெயலட்சுமி (காவல் கண்காணிப்பாளர்) ஆவின் லஞ்ச ஒழிப்பு , முதன்மை விழிப்புணர்வு அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,S.M.Nasser ,Deepavali , Consultation chaired by Minister Mr. S. M. Nasser regarding the promotion of the sale of spirits products on the eve of Deepavali
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...