ஒன்றிய அரசை கண்டித்து காஞ்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதைக்கண்டித்து  ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில், காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு,  50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, வன்முறையை ஏவி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்காதே, உத்தரப்பிரதேச பாஜ அரசே பதவி விலகு, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இதுபோல் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் மன்றத்தினர், உபியில் 9 விவசாயிகளை படுகொலை செய்தவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது, வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒன்றிய அரசுக்கு எதிராக கோரிக்கை பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>