×

தேசிய சொத்துகள் பகல் கொள்ளை: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்துக்கு விற்று இருப்பதன் மூலம் தேசிய சொத்துகளை ஒன்றிய அரசு பகல் கொள்ளை அடித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை ஒன்றிய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ 18,000 கோடிக்கு விற்றது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்துக்கு விற்று இருப்பதன் மூலம் தேசிய சொத்துகளை ஒன்றிய அரசு பகல் கொள்ளை அடித்துள்ளது. இந்த விற்பனையானது டாடா நிறுவனத்துக்கு மோடி அரசு இலவசமாக பரிசு அளித்ததற்கு சமமாகும். மொத்த விற்பனை தொகையான ரூ. 18,000 கோடியில் ரூ. 2,700 கோடி மட்டும் ஒன்றிய அரசுக்கு பணமாக செலுத்தப்படும். மீதமுள்ள 15,300 கோடியை ஏர் இந்தியா கடனுக்கு பொறுப்பேற்று எடுத்து கொண்டுள்ளது. இதனால் ஏர் இந்தியாவின் மீத கடன் தொகையான ரூ. 46,262 கோடி அரசின் கடன் சுமையாகும். அதாவது மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய விமானங்கள் உள்பட ஏர் இந்தியா கடனுக்கு வாங்கிய அனைத்து சொத்துகளும் தற்போது டாடா நிறுவனத்தின் சொத்துகளாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sidharam Yeturi , Daylight robbery of national assets: Sitaram Yechury charge
× RELATED மகனை இழந்து வாடும் சீதாராம்...