ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 2,400 கிலோ மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் டவுன் போலீசார் அச்சுந்தன்வயல் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து போலீசார் வாகனத்தை விரட்டிச் சென்றனர். இதையறிந்த டிரைவர், அச்சுந்தன்வயல் குறுங்காடு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தில் சோதனையிட்டனர். அதில்  தலா 50 கிலோ வீதம் 48 மூட்டைகளில் 2,400 கிலோ சமையல் மஞ்சள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றிருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த மேலக்கோட்ைடயை சேர்ந்த அன்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories:

More