×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்: பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரியும்..!

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக 6 மற்றும் 9ம்தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாக்குகள் அனைத்தும் நாளை காலை 8 மணிக்கு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறது.

மொத்தம் 74 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு சீட்டுகள் மூலம் தேர்தல் நடைபெற்றதால் முன்னணி நிலவரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு மேல் தெரிய வரும். மாலைக்குள் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குகள் எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேறு யாருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதி கிடையாது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags : 9th District Rural Inland Elections , Votes cast in 9 district rural local elections will be counted tomorrow at 8 am: Leading position will be known in the afternoon ..!
× RELATED 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு